விடிய விடிய கிரிவலம் ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்.

தை மாத பௌர்ணமி நேற்று இரவு லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் அண்ணாமலையார் மலையை சுற்றி விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி நேற்று இரவு 7:49 மணிக்கு தொடங்கி இன்று 12ம் தேதி புதன்கிழமை இரவு 8:16 மணிக்கு நிறைவடையும் என்பதால் நேற்று இரவு பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்றனர்.
இதனை தொடர்ந்து கிரிவலம் முடிந்த பக்தர்கள் தங்களது ஊருக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது விழுப்புரம் காட்பாடி பயணிகள் ரயில் வந்தவுடன் பக்தர்கள் ரயிலில் ஏறி தங்களது ஊர்களுக்கு சென்றனர். குறிப்பாக இரயிலில் ஏற பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முன்டியடித்து சென்றதாலும், இரயில் அடுக்குகளில் இருந்து வந்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :