அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை

by Editor / 02-09-2021 09:51:51am
அண்ணா சாலையில் கருணாநிதிக்கு சிலை

சென்னை அண்ணா சாலையில் ஏதாவதொரு இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தற்போது அறிவித்துள்ளார்.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முன்னதாக தி.க தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதுதொடர்பாக கோரிக்கை வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo