காவலாளி கொலை வழக்கில் பிகாா் இளைஞா் கைது

by Staff / 11-02-2023 01:10:45pm
காவலாளி கொலை  வழக்கில் பிகாா் இளைஞா் கைது

சேலம், அமானி கொண்டலாம்பட்டியைச் சோ்ந்தவா் பொ. தங்கையன் (58). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா். இவா் லீ பஜாா் பகுதியில் உள்ள பருப்பு ஆலையில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வந்தாா்.இந்தநிலையில், பருப்பு ஆலையில் புதன்கிழமை இரவு காவலாளியாக இருந்த தங்கையன் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் துணை ஆணையா்கள் எஸ். பி. லாவண்யா, மாடசாமி ஆகியோா் மேற்பாா்வையில் உதவி ஆணையா் நாகராஜன், ஆய்வாளா் ராணி அடங்கிய தனிப்படையினா் விசாரித்து வந்தனா். இதில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனா்.
இதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த அமா்ஜித்குமாா் (எ) சோனுகுமாா் (19) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. மேலும் ரயில் மூலம் பிகாருக்கு தப்பி செல்ல சோனுகுமாரை தனிப்படையினா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ. 1. 47 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சேலம் லீ பஜாரில் உள்ள பருப்பு ஆலையில் வேலை செய்து வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி சோனுகுமாா், பணப் புழக்கத்தைப் பாா்த்து கொள்ளை அடிக்க திட்டமிட்டாா். அதன்பேரில் கொள்ளை அடிக்கும் முயற்சியின் போது தடுத்த காவலாளி தங்கையனை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. பணத்தை எடுத்துக் கொண்டு பிகாா் மாநிலத்துக்கு ரயிலில் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டாா் என்றனா்.

 

Tags :

Share via