பிரபல நடிகை சி. ஐ. டி. சகுந்தலா காலமானார்..
பிரபல நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்.. சேலத்தை பூர்வீகமாக கொண்ட சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்ப காலத்தில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளிலும் நாடகத்திலும் நடித்து வந்தவர் பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் கிளப் டான்ஸ் ஆடுபவராகவும் பல்வேறு படங்களில் நடித்த அவர் சி.ஐ.டி சங்கர் என்கிற படத்தில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து அவர் பெயர் .சி.ஐ.டி சகுந்தலா என்று அழைக்கப்பட்டது. 1970 இல் வந்த இந்த படத்திற்கு பிறகு அவர் பெயர் கொண்டே அழைக்கப்பட்டார். தமிழ் ,தெலுங்கு ,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிஐடி சகுந்தலா திரைப்படத்தில் நடிப்பதில் குறைந்த பொழுது சபீதா என்கிற சபாபதி, கஸ்தூரி, தமிழ்ச்செல்வி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.. வயது மூப்பின் காரணமாக நேற்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.. வசந்த மாளிகை ,இதய வீணை ,சிஐடி சங்கர் ,கருந்தேள் கண்ணாயிரம், படிக்காத மேதை, ராஜ ராஜ சோழன், எங்கள் தங்க ராஜா ,அவன் ஒரு சரித்திரம், கீழ்வானம் சிவக்கும், பொன்னூஞ்சல், கை கொடுத்த தெய்வம், படிக்காத மேதை போன்ற பல்வேறு படங்களில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ,ஜெய்சங்கர் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.
Tags :


















