அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கும் மாணவர்கள்.. மத்திய அரசு எச்சரிக்கை

by Editor / 31-05-2025 01:40:07pm
அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கும் மாணவர்கள்.. மத்திய அரசு எச்சரிக்கை

கேரளா, மகாராஷ்டிராவில், அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் 2018-19 உடன் ஒப்பிடும்போது 2023-24ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும், கேரளாவில் 2022-23 உடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கும் போக்கு, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்துள்ளதாகவும், இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via