17 மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பு - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் மாஸ்க், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் 17 மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு தான் தமிழ்நாட்டில் பரவி வருவது எவ்வகை கொரோனா? உருமாறியதா? உருமாறிக்கொண்டு வருகிறதா? என்பது தெரியவரும்" என பேசினார்.
Tags :