உலக சுகாதார அமைப்பு - கொரோனாவுக்கு மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு

by Editor / 05-11-2021 03:20:21pm
உலக சுகாதார அமைப்பு - கொரோனாவுக்கு மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு

 

ஐரோப்பிய நாடுகளில் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் கொரோனாவுக்கு மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
 
கொடிய உயிர் பலி வாங்கிய கொரோனா 2வது அலைக்கு பின், குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை ஐரோப்பியா, மத்திய ஆசிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுதவிர ஒரு சில நாடுகளில் உருமாறிய புதிய வைரசும் பரவி வருகிறது.

இந்தநிலையில் 53 நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அடுத்தாண்டு பிப்ரவரிக்குள்  கொரோனாவுக்கு புதிதாக  5 லட்சம்  பேர் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.
 
தடுப்பூசியை விரைந்து செலுத்தாததே இந்நிலைக்கு காரணம் எனவும் கூறியுள்ளது. ஐரோப்பாவில் கடந்த 4 வாரங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 55 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via