குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மிருகங்கள் 2பேர் கைது
மனிதக் கழிவுகளை அகற்றும் வாகனத்தில் கொண்டு சென்ற கழிவுகளைத் தடுப்பணையில் கொட்டிய 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். உதகை மாவட்டம் நஞ்சநாடு அருகே நரி குழியாடா கிராமத்துக்கு செல்லும் குடிநீரில் மனித கழிவை கலந்த தஞ்சையை சேர்ந்த ரஞ்சித் (29) சக்திவேல் (24) ஆகியோர் போலீசார் கைது செய்தனர். இந்தக் கொடூர சம்பவத்துக்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags :













.jpg)





