திருமங்கலத்தில் ரூ 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக போஸ்டர்கள். 

by Editor / 26-04-2024 09:38:42am
திருமங்கலத்தில் ரூ 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக போஸ்டர்கள். 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் .ரூ 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தேர்தலுக்கு முன் பல இடங்களிலும் திமுக, அதிமுக, பாஜகவினர்  பணப்பட்டுவாடா செய்தனர்.

இந்த நிலையில், திருமங்கலம் தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து, திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிச்குமார், செயலாளர் சின்னச்சாமி உள்ளிட்ட நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : திருமங்கலத்தில் ரூ 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக போஸ்டர்கள். 

Share via

More stories