ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் இரண்டு டன் வாழைப்பழங்களை அழிப்பு.

by Editor / 26-04-2024 09:43:58am
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் இரண்டு டன் வாழைப்பழங்களை அழிப்பு.

திருநெல்வேலி மாநகராட்சி ஜங்ஷன் மற்றும் தச்சநல்லூர் பகுதிகளில் மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்களை ரசாயனமூலம் பழுக்க வைப்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர் சசிதீபா மற்றும் தச்சநல்லூர் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் திரு ஆர் சங்கர நாராயணன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.
 ஆய்வின்போது ஜங்ஷன் பகுதிகளில் செயற்கை முறையில் ரசாயனங்களின் மூலம் மாம்பழங்களை பழுக்க வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 250 கிலோ மாம்பழங்கள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. 
தொடர் ஆய்வில் வாழைப்பழங்களை பழுக்க வைப்பதற்கும் ரசாயனங்களை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.  இந்த ஆய்வில் சுமார் இரண்டு டன் எடையுள்ள ரசாயன மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வாழைத்தார்களை பழுக்க வைப்பதற்கு பயன்படுத்திய ஸ்பிரேயர் மற்றும் ரசாயனங்களும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட மாம்பழங்கள் மற்றும் வாழைத்தார்கள் உடனடியாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ராமையன்பட்டி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு. இளங்கோ முன்னிலையில் கைப்பற்ற அனைத்து பொருட்களும் குப்பை கிடங்கில் குழி தோண்டி கிருமி நாசினி தெளித்து முறையாக அழிக்கப்பட்டது.

 

Tags : ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் இரண்டு டன் வாழைப்பழங்களை அழிப்பு.

Share via