பரப்பரப்பான சுழலில் தமிழக சட்டபேரவையின் மழைகால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

by Editor / 09-10-2023 08:54:27am
பரப்பரப்பான சுழலில் தமிழக சட்டபேரவையின் மழைகால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி அரசின் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான மானிய தொகைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.  15 தமிழர்களை மீட்பது குறித்து கவனத்திற்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022 ஜூலை 11 இல் அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பினை தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வானதாக சபாநாயகருக்கு அதிமுக  சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, செப்டம்பர் 22 ஆம் தேதி அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரை மீண்டும் சந்தித்து கடிதம் அளித்தனர்.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருகில் ஆர்.பி.உதயகுமாருக்கு இடம் அளிக்கப்படுமா? முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல் வரிசையிலே இடம் ஒதுக்கப்படுமா? அல்லது கடந்த கூட்டத்தொடர்களைப் போன்று மாற்றமின்றி நீடிப்பா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Tags : பரப்பரப்பான சுழலில் தமிழக சட்டபேரவையின் மழைகால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

Share via