தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசபிரபு இவர் நியூஸ் 7 என்ற தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பல்லடம் பகுதியில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை இன்று இரவில் வீட்டில் இருந்தபோது இருசக்கரவாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வீட்டை விட்டு வெளியே வந்த நேரம் பார்த்து அவரை கால் காய்,சரமாரியாக வெட்டி விட்டு மர்மநபர்கள் தப்பியுள்ளனர், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த அவரை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்து மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Tags : தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்.