மது பாட்டிலுக்குள் கிடந்த ஈ..எறும்பு மதுப்பிரியர் அதிர்ச்சி.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் நவாச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று 20 ஆம் தேதி தேதி அந்த கடையில் சுமார்2.20 மணியளவில் அதே பகுதியை சார்ந்த ஒருவர் டாகாடி லெமன் குவாட்டர் 1யை 280 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் இதன் தொடர்ச்சியாக அந்த குவாட்டர் பாட்டிலில் ஈயும் எறும்பும் செத்து கிடந்துள்ளது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் கொடுத்து இந்த பாட்டிலில் ஈயும் எறும்பும் செத்து கிடப்பதாக தெரிவித்துள்ளார் பணியாளர்கள் தங்களது டாஸ்மார்க் கடைக்கு 18 வகையான கம்பெனிகளில் இருந்து மதுபானங்கள் வருவதாகவும் இதனை எப்படி தாங்கள் கண்டுபிடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர் அதற்கு மதுபான வாங்கிச் சென்ற நபர் பாம்பு பல்லியோ செத்து மிதந்தாஏற்றுக் கொள்வீர்களா? என தெரிவித்துள்ளார். கடை விற்பனையாளர்கள் அந்தப் பாட்டிலை மது பிரியரிடம் வாங்கிவிட்டு மாற்று பாட்டிலை கொடுத்து சமாதானம் கூறி அனுப்பியுள்ளனர்.
Tags : மது பாட்டிலுக்குள் கிடந்த ஈ..எறும்பு மதுப்பிரியர் அதிர்ச்சி.