by Staff /
09-07-2023
04:07:07pm
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விளிஞ்சம் அருகே உள்ள முக்கோலா பகுதியில் சனிக்கிழமை காலை மகாராஜன் (55) என்ற நபர் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார். அவரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டும் அவரை மீட்க முடியவில்லை. கிணற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த போது கால் தவறி கிணற்றில் சிக்கியதாக கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
Tags :
Share via