தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை

by Editor / 19-10-2021 10:35:06am
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை

தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via

More stories