காங்கிரஸ் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

by Staff / 25-03-2024 04:19:55pm
காங்கிரஸ் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச்23 வெளியிடப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via