தென்மேற்கு அரப்பிக்கடலில் பலத்த காற்று

by Editor / 15-09-2021 02:54:27pm
தென்மேற்கு அரப்பிக்கடலில் பலத்த காற்று

தமிழ்நாடு

தென்மேற்கு அரப்பிக்கடலில் பலத்த காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Published

 45 mins ago 

on

 15/09/2021

By

 

storm cyclone

தென்மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் அந்த பகுதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது

இந்த நிலையில் இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி கோவை பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி தென் மாவட்டங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்கள் நீலகிரி கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via