வரலாற்றில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
1508-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி இரண்டாவது முகலாயப் பேரரசர் ஹுமாயூன் பிறந்தார்.
1869-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி திமீத்ரி மெண்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
பிறந்த நாள் :-
*வாலண்டினா டெரெஷ்கோவா
முதற் தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரெஷ்கோவா (Valentina Vladimirovna Tereshkova)1937-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார்.
1961-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின், மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது.
இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.மிகக் கடினமான பயிற்சிகளுக்கு பிறகு 25 வயதான வாலண்டினா தேர்வு செய்யப்பட்டார்.
வோஸ்டாக்-6 (Vostok-6)என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது.இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார்.
இவர்'ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்' என்ற பதக்கம்,'லெனின் விருது'மற்றும் பல விருதுகளை பெற்றுள்ளார்.
விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும்,அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்தவர் என்ற பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.
Tags :