பிரிவினைவாதத்தை பாஜக உண்டாக்குகிறது; அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

by Editor / 19-04-2025 02:34:29pm
பிரிவினைவாதத்தை பாஜக உண்டாக்குகிறது; அமைச்சர்  அன்பில் மகேஷ் பேட்டி

நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்; பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் வஞ்சிக்கப்படுவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். அதிமுகவில் 50 ஆண்டுகளாக பயணித்த இஸ்லாமியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். 

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் முதல்வரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகி இருப்பதை வரவேற்கிறேன். நாங்கள் சொல்வதை மட்டும்தான் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக தோற்றது போல இந்த வக்பு திருத்த சட்டம் வருகின்ற தேர்தலில் பிரதிபலிக்கும். 

இஸ்லாமியர்கள் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போதைய வக்பு திருத்த சட்டத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினராக நியமித்து இஸ்லாமியர்களிடம் வம்பிலுக்கும் வேலையை பாஜக செய்கிறது. அண்ணன் தம்பி உறவுகளான எங்களிடம் பிரிவினைவாதத்தை பாஜக உண்டாக்குகிறது என்று கூறினார்.

 

Tags :

Share via