துரை வைகோவின் ராஜினாமாவை ஏற்காத கட்சித் தலைமை

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகுவதாக இன்று(ஏப்.19) காலை அறிவித்திருந்தார். இது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து சென்னை அண்ணா நகர் இல்லத்தில் தனது தந்தையும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவை அவர் நேரில் சந்தித்தார். அப்போது வைகோ, தனது மகனிடம் ராஜினாமாவை கட்சித் தலைமை ஏற்காது என்றும், கட்சிப் பதவியிலிருந்து விலகும் முடிவை திரும்பப்பெறும்படியும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :