ஒரே ஒரு ஓட்டுக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி

by Staff / 19-04-2024 12:40:57pm
ஒரே ஒரு ஓட்டுக்காக அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி

தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலோகம் என்ற கிராமத்தில் சோகேலா தயாங் என்ற பெண் வாக்காளர் மட்டுமே உள்ளார். அவரது ஒற்றை வாக்கிற்காக தேர்தல் ஆணையம் அங்கு ஒரு வாக்குச்சாவடியை அமைத்துள்ளது. சுமார் 10 அதிகாரிகள் அந்த சாவடியை அடைய 39 கி.மீ. பயணித்துள்ளனர்.அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அவர் தனது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தினார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

 

Tags :

Share via
Logo