ஜீ.பி. முத்துவுக்கு பெருகும் ஆதரவு

பிக்பாஸில் ஜீ .வி.முத்துவுக்கு தினமும் பெருகும் ஆதரவு சமூக வலைத்தள பதிவுகள் புலப்படுத்துகிறது .கல்யாணப் பரிசுபடத்தில் கே.ஏ.தங்கவேலுவின் நகைச்சுவையை ரசிக்காதவர் அன்றைய பொழுதில் யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.அவரைப் போலவே முகச்சாடையிலும் பாவனையிலும் இருக்கும் முத்து டிக் டாக ஆப் ,யூடியூப் மூலம் அறிமுகமாகி ,தன் திருநெல்வேலி வட்டார வழக்கு மொழி மூலம் அனைவரையும் தம் வெகுளித்தனமான பேச்சாலு ம் வெள்ளந்தியான செயலாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் .இந்த வார இறுதியில் நடிக்காதிங்க என்று சொன்னதற்கு கண் கலங்கியதை அவர் ரசிகர்கள் பொறுத்துக்கொள்ளாமல் தலைவா நாங்க இருக்கிறோம் என்று சமூக வலைத்தளங்கள் முழுவதிலிருந்தும் அவருக்கு ஆதரவு குரல் எதிரொலிக்கிறது .பிக்பாஸின் உச்சக்கட்டம் முத்து இல்லாமல் இல்லை .சமீபத்தில் நடன இயக்குனரின் ஆல்பத்தில் சின்னதாக இடையிடையே வந்து நக்கு என்கிற சொல்லை சொல்லி மறையும் முத்து காட்சி இன்றைக்கு பல முறை பார்க்கும் நிலையை தூண்டிவுள்ளது .முத்து சேர்ந்து ஈடுபடும் நிகழ்வுகள் பொதுமக்களால் அதிகம் விரும்பபடுவதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் ஒரு வாரத்திலே ஜெ ட் வேகமெடுத்துள்ளது
Tags :