தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு அரசாணை.
தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு அரசாணை பிறப்பித்துள்ளது..சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட உள்ள இத் திட்டம், படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும்.. தூய்மைப் பணியாளர்கள் ,காலை, மதியம், மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் கட்டணமில்லா உணவைப் பெறுவார்கள்..அதிகாலையில் வேலைக்குச் செல்வதால் ,உணவு தயாரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது...இந்தத் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படுத்தும். இலவச உணவுத் திட்டத்துடன், தூய்மைப் பணியாளர்களுக்காக மேலும் பல நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது:. குப்பைகளைத் தொடர்ந்து கையாள்வதால் ஏற்படும் தோல் நோய்களைத் தீர்க்க ஒரு சிறப்பு சுகாதாரத் திட்டம்.பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு.நகர்ப்புறங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும். .கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்..தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை.₹5 லட்சம் மதிப்புள்ள இலவச காப்பீட்டுத் திட்டம்.
Tags :


















