சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே தனியாக அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவரை முன்மொழிபவர் மனுதாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், 22ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :