குஜராத் அமைச்சரவை விரிவாக்கம்
குஜராத் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 24 பேர் பதவியேற்று கொண்டனர்.குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (செப்.,13) பூபேந்திரா படேல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.தொடர்ந்து, அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ஆச்சார்யா தேவ்ராஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சபாநாயகராக இருந்த ராஜேந்திர திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பதில், நிமாபென் ஆச்சார்யா புது சபாநாயகராக பதவியேற்க உள்ளார்.இன்று அமைச்சர்களாக, ராஜேந்திர திரிவேதி, ஜிது வஹானி, புர்னேஸ் மோடி, ரிஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், கனுபாய் தேசி, ஜிதுபாய் ராணா, நரேஷ்பாய் படேல், பிரதீப் பர்மர், அர்ஜூன் சவுஹான், ஹர்ஸ் சிங்வி, ஜெக்தீஷ் பஞ்சல், பிரிஜேஷ் மெர்ஜா, ஜிது சவுத்ரி, மணிஷா வகீல், முகேஷ் படேல் நிமிஷாபென் சுதர், அர்விந்த் ரயானி, குபெர்பாய் திந்தோர், கிர்திஷிங் வகேலா, கஜேந்திர சிங் பர்மர், மக்வானா, வினோத் மொராடியா, தேவா ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.அவர்களில் 10 பேர் கேபினட் அமைச்சர்கள், 5 பேருக்கு தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியும், 9 பேருக்கு இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டு உள்ளது.முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த நிதின் படேல், பூபேந்திர சவுடாசாமா, கவுசிக் படேல் பிரதீப் சிங் உள்ளிட்டோருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Tags :