மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து மக்களின் சுமையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை-எடப்பாடி பழனிச்சாமி
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துறையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியை சிம்ப்ளி வேஸ்ட் என விமர்சித்தார். திமுக ஆட்சியில் ஏழை பரம ஏழை ஆனது தான் மிச்சம் என கூறினார் திமுக ஆட்சியில் அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாகவும் காவிரி விவகாரத்தில் புரட்சித்தலைவி சட்ட போராட்டம் நடத்தி தமிழக விவசாயிகளுக்கு நல்ல தீர்ப்பை வரவழைத்து கொடுத்தார் எனவும் பேசினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சொல்லப்பட்ட ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளிவந்தது அதில் முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினும் மருமகன் சபரீசனும் முப்பதாயிரம் கோடி கொள்ளையடித்து வைத்துக்கொண்டு அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக கூறப்பட்ட ஆடியோ வெளியானது இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறந்து எதுவும் தெரிவிக்கவில்லை என கூறினார். கடன் வாங்குவதிலும் ஊழல் செய்வதிலும் போதைப் பொருள் விற்பனையிலும் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குவதால் முதல்வர் ஸ்டாலின் தன்னை சூப்பர் முதல்வர் என்று சொல்லிக்கொள்ள தகுதியானவர் என கூறினார்.
அதேபோல் மத்திய பாஜக அரசு 2014 ஆம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது பெட்ரோல் 71 ரூபாய்க்கும் டீசல் லிட்டர் 55 ரூபாய்க்கும் விற்கப்பட்டது அப்போது கச்சா எண்ணையை மத்திய அரசு டாலர் ஒன்றுக்கு 105 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது. ஆனால் தற்போது 2024-ல் கச்சா எண்ணெய் டாலர் ஒன்றுக்கு 86 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் வேளையில் பெட்ரோல் 102 ரூபாய்க்கும் டீசல் 96 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக கூறி மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து மக்களின் சுமையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டி பேசினார்
Tags : எடப்பாடி பழனிச்சாமி