திமுக பிரமுகர் மீது பாலியல் புகார்

by Staff / 26-01-2024 02:45:05pm
திமுக பிரமுகர் மீது பாலியல் புகார்

சென்னை அம்பத்துார், கருக்கு, மாதவி தெருவைச் சேர்ந்தவர் மோகன் (62). இவர், 82வது வட்ட தி.மு.க., பிரதிநிதி. இவருக்கு சொந்தமான வீட்டில், தனியார் நிறுவன ஊழியரான சியாம் (29), மனைவி தமிழரசி (21), என்பவருடன் வசித்து வருகிறார். இரு நாட்களுக்கு முன், தமிழரசி வீட்டில் தனியாக இருந்த போது, மோகன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அம்பத்துார் மகளிர் போலீசில், மோகன் மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்காமல், தி.மு.க., பிரமுகருக்கு சாதகமாக, தமிழரசியை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது புகார் குறித்து, விசாரணை நடத்தப்பட்டுவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo