பாஜக கூட்டணியில் இணையும் நிதிஷ்குமார்
மக்களவை தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான இந்தியா கூட்டணியில் சமீப நாட்களாக பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. கூட்டணியில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறும் நிலையில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கூட்டணியில் இருந்து விலகத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. அவர் விரைவில் பாஜக கூட்டணியில் இணையவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விஷயத்தில் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிவு வெளியாகும். ஏற்கனவே மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் மட்டும் தனித்து போட்டி என அறிவித்துவிட்டார். ஆம் ஆத்மியும் பஞ்சாபில் தனித்து போட்டி என அறிவித்துள்ளது.
Tags :