ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல்-பிரதமர் மோடிகுணமடையவும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனமும்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, 'ரோடு ஷோ' சென்ற அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பூக்களுடன் கற்களைக்கொண்டு மர்மநபர்கள் எறிந்திருக்கிறார்கள். நெற்றியில் காயம் ஏற்பட்ட ஜெகன்மோகன் ரெட்டிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கல்வீச்சு சம்பவத்துக்கு பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், விரைவில் அவர் குணமடையவும்ஆரோக்கியம் பெறவும் பிராா்த்தனை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இத் தாக்குதல் சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல்!