காவலில் துன்புறுத்தப்படவில்லை - செந்தில் பாலாஜி

by Staff / 12-08-2023 03:37:09pm
காவலில் துன்புறுத்தப்படவில்லை - செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையின் 5 நாட்கள் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்த, அவருக்கு வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். காவலில் துன்புறுத்தப்பட்டீர்களா? என நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, செந்தில் பாலாஜி, தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என பதிலளித்துள்ளார். இதனிடையே அவர், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்த, 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

 

Tags :

Share via

More stories