அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  புழல் சிறையில் அடைப்பு

by Editor / 21-06-2021 06:25:56pm
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  புழல் சிறையில் அடைப்பு


நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.விசாரணைக்குப் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டா ர்.
மணிகண்டனை சென்னைக்கு அழைத்து வந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் மணிகண்டன் சைதாப்பேட்டை 17வது கோர்ட் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜூலை 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.மணிகண்டனை பிடிக்க சென்னை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மணிகண்டனின் செல்போன் எண்ணை வைத்து தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் அது தொடர்பாக சைபர்கிரைம் மூலம் ஆய்வு நடத்தினர். 
அப்போது மணிகண்டன் நெல்லையைச் சேர்ந்த தனது நெருங்கிய நண்பரின் வாட்ஸ்அப் மூலம் தனது உறவினர்களிடம் பேசி வந்தது தெரியவந்தது. அதனைப் பின்தொடர்ந்த போலீசார் அந்த செல்போன் எண்ணின் டவரை சோதனை செய்த போது அது பெங்களூருவில் மணிகண்டன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. மணிகண்டனின் நெல்லை நண்பர் அவரது பெங்களூரு நண்பரான கல்குவாரி அதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்குள் மணிகண்டனை தங்க வைத்துள்ளார்.
சென்னைக்கு மணிகண்டனை அழைத்து வந்த போலீசார் அவரது உதவியாளர்கள் ரவி, இளங்கோ ஆகியோரிடம் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் புழல் சிறையில் அடைக்கப்பட்டா ர்.

 

Tags :

Share via