கவனக்குறைவால் சிறைக்கைதி விடுவிப்பு : மீண்டும் கைது

by Editor / 21-06-2021 06:04:43pm
கவனக்குறைவால் சிறைக்கைதி விடுவிப்பு : மீண்டும் கைது

 

நெல்லை மாவட்டம்  சிவந்திபட்டியில் கடந்த 8-ம்தேதி சிவந்திபட்டியை சேர்ந்த ராஜா என்ற மணக்கரை ராஜா (வயது 52) என்பவர் தோட்டத்தில் வைத்து  அதே ஊரை சேர்ந்த பரமசிவன் என்ற கட்ட பரமசிவன் (வயது 37), பரமசிவன் (வயது 42) ஆகிய மூன்று பேரும் சாராயம் காய்ச்சியுள்ளனர். இதுகுறித்த வந்த தகவலின்பேரில் அங்கு சென்ற கதவல் உதவி ஆய்வாளர்  சுடலைகண்ணு மற்றும் காவலர்கள்  அங்கு சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த நபர்களை கைது செய்து நாங்குனேரி கிளை சிறையில்  அடைத்தனர். 
இந்நிலையில் சிறையில்  இருந்த ராஜா என்ற மணக்கரை ராஜா, பரமசிவன் என்ற கட்ட பரமசிவன், பரமசிவன் ஆகிய மூன்று பேர் சார்பில் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் பெயிலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் பரமசிவன் என்ற கட்ட பரமசிவன், பரமசிவன் இருவருக்கும் நீதிமன்றம் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் 15 நாட்களுக்கு தினமும் காலையில் கையெழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன்  வழங்கியுள்ளது. ராஜா என்ற மணக்கரை ராஜாவின் ஜாமீன் மனுவை  நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இந்நிலையில் இந்த ஜமீன்  உத்தரவுபடி நாங்குனேரி  கண்காணிப்பாளர் ராஜமாணிக்கம் ஒரே வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஜமீன் தள்ளுபடியான நிலையில் அதனை கவனிக்காமல் மூன்று பேரையும் பெயிலில் விட்டுவிட்டார்
. இந்நிலையில் மூன்று பேரும் சிவந்தபட்டி காவல் நிலையத்தில் கண்டிசன் பெயில் கையெழுத்து போட சென்றபோது ராஜா என்ற மணக்கரை ராஜாவுக்கு ஜாமீன்  கொடுக்காமல் வெளியே வந்திருப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்து அவரை பிடித்து வைத்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சிறைத்துறை போலீசார் ராஜா என்ற மணக்கரை ராஜா மீண்டும் போலீஸ் காவலுடன்  சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். ஒரே வழக்கில் தொடர்புடைய மூன்று பேரில் இரண்டு பேருக்கு பெயில் கிடைத்த ஆணையை சரியாக படிக்காமல் வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை விடுவித்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர் நாங்குனேரி கிளைச்சிறையில்  உள்ள போலீசாரிடம் விசாரனை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் நாங்குனேரி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via