இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு மேம்படும்

by Staff / 13-05-2022 05:49:38pm
இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு மேம்படும்

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி காரணமாக, கடந்த 10ம் தேதி பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதனையடுத்து, இந்த வாரத்துக்குள் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருந்தார்.

இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில், இலங்கை பிரதமாராக 6வது முறையாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.  பிரதமரைத் தொடர்ந்து, 15 பேர் அடங்கிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பதவியேற்புக்குப் பின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இந்தியா - இலங்கை உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு மேம்படும் என தெரிவித்தார்.மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் சவாலை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மகிந்த ராஜபக்சே, எம்பி ஜோன்ஸ்டன் பெராண்டோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த சூழலில், இலங்கையில் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 8 மணி நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு அமலாகும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via