3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற ரவிக்குமார் எம்.பி. கோரிக்கை
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த 3 சட்டவிரோத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாக விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மக்களவையிலிருந்து எம்.பி.க்கள் பெருமளவில் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் எந்த விவாதமும் இன்றி இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்த 3 சட்டவிரோத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :