நடிகர் சரத்பாபு காலமானார்

by Staff / 22-05-2023 03:03:07pm
நடிகர் சரத்பாபு காலமானார்

பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சரத்பாபுவுக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று உயிரிழந்துள்ளார். மேலும், சரத்பாபு தமிழில் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via