சாலை விபத்தில் பெங்காலி நடிகை பலிசாலை விபத்தில் பெங்காலி நடிகை பலி

by Staff / 22-05-2023 02:53:27pm
சாலை விபத்தில் பெங்காலி நடிகை பலிசாலை விபத்தில் பெங்காலி நடிகை பலி

பெங்காலி தொலைக்காட்சி நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (29) விபத்தில் உயிரிழந்தார். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளது. பைக் டாக்ஸியில் இருந்து சாலையில் விழுந்த நடிகை மீது லாரி ஏறியது. கொல்கத்தா பராநகரில் சனிக்கிழமை இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பைக் டாக்ஸியில் பனிஹட்டி ரயில்வே பூங்காவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டார். இதனால் நடிகை சாலையில் விழுந்த நிலையில், லாரி அவரது உடல் மீது ஏறியது.சம்பவ இடத்தில பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via