பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம் - அதிமுக Ex.MLA

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருத்தம் அளிக்கிறது என அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் கூறியுள்ள கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய குணசேகரன், இதற்கு முன் பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அதிமுகவுக்கு வேலை பார்க்க முடியாது என இஸ்லாமிய சகோதரர்கள் கூறினார்கள். கூட்டணியால் வருத்தம் இருந்தாலும் இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது” என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
Tags :