திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

by Editor / 18-06-2022 05:17:59pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை முதல் அதிக அளவில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.மேலும்  வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 4 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.இதனால் தற்போது வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக 20மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு 3 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என தொிவிக்கப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories