காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம்.- தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

by Admin / 18-06-2022 05:20:54pm
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம்.- தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக தாது அணைகட்டுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கிஉள்ளது.இதற்கு தமிழக முதலமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒரு குழுவை டெல்லிக்கு மேகதாது விவகாரத்தில் சுமுகமான சூழலை உருவாக்க பிரதமரைச்சந்திக்க அனுப்ப உள்ளார்.முதலமைச்சர் இது குறித்து  தம் ட்விட்டர் பக்கத்தில், மேகதாது அணை  குறித்து  பதிவிட்டுள்ளார்.மேகதாது அணையை கட்டுவது என்பது, தமிழகத்தின் காவிரி உரிமையை தடுப்பதும், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதன் மூலமாகத்  தமிழக   உழவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்
 

Tags :

Share via

More stories

Logo