ஹாமூன் புயல்.. ஏழு மாநிலங்களுக்கு எச்சரிக்கை

by Staff / 24-10-2023 01:31:46pm
ஹாமூன் புயல்.. ஏழு மாநிலங்களுக்கு எச்சரிக்கை

வடமேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள 'ஹாமூன்' புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புதன்கிழமை பிற்பகலில் வடக்கு-வடகிழக்கு நகர்ந்து வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா, அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories