பழிக்குப்பழி தலையை துண்டித்து கொலை

தூத்துக்குடியில் நண்பனை கொன்றவரின் தலையை துண்டித்து பழிக்குப்பழி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அண்ணாநகரைச் சேர்ந்த சப்பாணி முத்து (42) என்பவருடன் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன் சப்பாணியின் தலையில் கல்லைத்தூக்கிப்போட்டு கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற மாரியப்பன் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், பழிக்குப்பழியாக மாரியப்பனை சப்பாணியின் உறவினர்கள் அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து சப்பானி முத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் தலையை போட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சப்பாணி முத்துவின் உறவினர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :