விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய தஞ்சை மாவட்ட காவல் துறையைக் கண்டித்து திண்டுக்கல்லில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அது பற்றிய விவரம் வருமாறு. தஞ்சை ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தெரியாமல் விவசாயிகள் பேரில் 115 கோடி கடனாக பெற்று உள்ளது. பின்னர் அந்த கடனை அடைக்காத நிலையில் அது தொடர்பாக நியாயம் கேட்டு கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர் பொய்யாமொழி தலையிட்டும் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் செவ்வாயன்று 301 நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட காவல்துறை அந்த விவசாயிகளின் கோரிக்கை நியாயத்தை புறக்கணித்துவிட்டு அப்பாவி விவசாயிகள் மீதும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், கரும்பு விவசாயிகளின் பாக்கி பணத்தை உடனடியாக வழங்கிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Tags :