சி.ஏ.ஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - விஜய்

by Editor / 11-03-2024 11:31:55pm
சி.ஏ.ஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - விஜய்

சிஏஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - விஜய்

சி.ஏ.ஏ. சட்டம் என்றால் என்ன?

2019-ல் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவின் திருத்தப்பட்ட குடி உரிமை சட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இது நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. இச்சட்ட அறிவிப்பின் மூலமாக அருகில் உள்ள நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வந்து ஐந்து ஆண்டுகள் அவர்கள் தங்கி இருந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. 2014 டிசம்பருக்கு முன் வங்காளதேசம் ,ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர் இந்துக்கள்,, சீக்கியர்கள், சமணர்கள் ,பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இருப்பினும் மேல் குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் குடியேறிய குடிபுகவுள்ள இஸ்லாமியர்கள் இந்த வகைப்பாட்டிற்குள் வரமாட்டார்கள். இச்சட்டம் மதத்தை முன்வைத்து நிகழ்த்தப்படுவதாக எதிர்ப்புகள் உருவாகிய நிலையில் இச்சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்த குடியுரிமை சட்டத்தின் மூலமாக வழிவகை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது .ஆனால், அசாம் ,திரிபுரா மாநிலங்களில் இருந்து வங்கதேசத்தில் குடியேறிய இந்துக்களுக்கு இது போன்ற குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : சிஏஏ சட்டம் ஏற்கத்தக்கது அல்ல - விஜய்

Share via