ஆலந்தூரில் திடீரென தீ விபத்து

ஆலந்தூர் தொகுதி மேட்டு காலனி மணப்பாக்கம் பகுதியில் திடீரென குடிசை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஓ அஹபு அவரது மனைவி இரண்டு மகள்களுடன் குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்
வீட்டை பூட்டி அனைவரும் பணிக்கு சென்றுள்ள நிலையில் திடீரென குடிசை வீடு மின் கசிவு ஏற்பட்டு எரிந்துள்ளது.இதனை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவலை கூறினர்.எனினும் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பே குடங்களில் தண்ணீர் எடுத்து அனைவரும் சேர்ந்து தீயை அணைத்து விட்டனர்.தீயணைப்பு வீரர்கள் வரும் பாதையில் சாலை பணிகள் நடந்து வருவதால் வாகனம் தெருவிற்குள் உள்ளே நுழைய முடியவில்லைஎனினும் தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்தஇடத்தில் பொருட்களை மீட்டெடுத்து உதவி செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :