அனைவரும் தடுப்பூசி  செலுத்திக்கொண்ட முதல் கிராமம்

by Editor / 08-06-2021 04:32:18pm
அனைவரும் தடுப்பூசி  செலுத்திக்கொண்ட முதல் கிராமம்



நாட்டிலேயே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் கிராமம் என்ற பெருமையை வேயான் கிராமம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்திலிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வேயான் கிராமம். மிகக் குறைந்த அளவிலான மக்கள் தொகை கொண்ட இந்த குக்கிராமத்தில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் 362 பேர்.தடுப்பூசி செலுத்தும் பணிதடுப்பூசி செலுத்தும் பணி'ஜே அண்ட் கே மாடல்' (J&K model) திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்றது. தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனைவரும் தயக்கம் காட்டினர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70 விழுக்காடு பேருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இந்த விழுக்காடானது தேசிய அளவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விழுக்காடை விட இரண்டு மடங்காகும்.கரோனா தொற்றின் பரவல் காரணமாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ளதால் இந்த பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

 

Tags :

Share via