திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப OTT நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது
இதுவரை ஒரு திருமண நிகழ்வை படமெடுத்து..வெளியிட..ஒரு நிறுவனமும் முயன்றதில்லை.முதல் முறையாக நட்சத்திர ஜோடிகளான விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை ரசிகர்கள் நேரடிக்காட்சியாக காண, ott நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. கிரிகெட், கோவில் கும்பாபிஷேகம்,அரசியல் மாநாடுகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் .ஆனால்,தனிநபர் திருமண நிகழ்ச்சிக்கு கோடிகளைக்கொடுத்து ஒளிபரப்பஉரிமை பெறப்பட்டுள்ளதாகத் தகவல்.வரும் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் ,நட்சத்திர விடுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.தமிழ்,தெலுங்கு.மலையாளம் உள்ளிட்ட திரைப்பிரபலங்களை அழைத்துள்ளதோடு,தமிழக முதலமைச்சர் ,அமைச்சர்கள்,முன்னாள் அமைச்சர்கள் முக்கிய பிரபலங்களும் அழைக்கப்பட்டிருப்பதால்,திருமண நிகழ்வை காண நயன்தாரா ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.பிரபலமாகி விட்டால் தும்மினால் கூட துட்டுதான்என்று கோடம்பாக்கம் கூவிகொண்டிருக்கிறது.
Tags :