பாஜக தொண்டர் மீது தாக்குதல்

by Staff / 08-01-2023 11:23:17am
பாஜக தொண்டர் மீது தாக்குதல்

உத்திரபிரேதேசம் மாநிலம் கான்பூரில், போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில், பாஜக தொண்டர் ஒருவரை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த தொண்டர் தன்னுடைய டீக்கடையை சிலர் சேதப்படுத்தியதாக புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளார். அங்கு அவரை போலீசார் அடித்துள்ளனர். இதை கண்டித்து பாஜகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via
Logo