இந்தியர்கள் தரைவழியாக அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

by Admin / 20-03-2026 07:07:51am
இந்தியர்கள் தரைவழியாக அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கியிருந்த சுமார் 882 பேர் பாதுகாப்பாக தாயகம் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இது குறித்து வெளிவுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல். ஈரானின் வான்வழி மூடப்பட்டுள்ளதால் இந்தியர்கள் தரைவழியாக அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 772 பேர் ஆர்மேனியா வழியாகவும் 110 பேர் அஜர்பைஜான் வழியாகவும் எல்லைகளை கடந்துள்ளனர். திரும்பியவர்களில் பெரும்பாலோர் ஜம்மு- காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள். இவர்கள் தவிர வணிகர்கள் மற்றும் புனித பயணம் மேற்கொண்டவர்களும் இதில் அடங்குவர். ஈரானுக்கு சென்றிருந்த 284 யாத்திரர்களில் 280 பேர் ஆர்மேனியா வழியாக ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்துள்ளனர் .நாளொன்றுக்கு 10 இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் அங்கு திரும்புவதில் சிறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. பிப்ரவரி இறுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரானின் மீது நடத்திய ராணுவ தாக்குதலுக்கு பிறகு அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியர்கள் தரைவழியாக அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

Tags :

Share via

More stories