சிங்கப்பூர் அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

by Staff / 24-05-2023 04:22:38pm
சிங்கப்பூர் அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை

சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து, வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பசுமை, டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo