குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச குளிர்சாதன பெட்டி வழங்கப்படும்.-அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டாா்எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இதற்கு முன்பு மூன்று கட்டங்களாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு இருந்தார்.அதிமுக ஆட்சிக்கு வந்தால்,அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச குளிர்சாதன பெட்டி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தல பத்தாயிரம் ரூபாய் கடனுத்தொகையாக வழங்கப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதிய தொகை 2000 ஆக உயர்த்தப்படும் . மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் .வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் . விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக ஏற்ப்படும் . ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் .தேர்தல் அறிக்கையில் மொத்தம் 297 வாக்குறுதிகள் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
Tags :



















